
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. இந்தியாவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில், ரூ.1.58 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக, எந்த அமெரிக்க நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்?
அ. ஆப்பிள்
ஆ. மைக்ரோசாப்ட்
இ. சேல்ஸ் ஃபோர்ஸ்
ஈ. மெடா
2. 'சீல் டவர்' எனும், உலகிலேயே மிக உயரமான ஓட்டல், எந்த நகரத்தில் திறக்கப்பட்டு உள்ளது?
அ. துபாய்
ஆ. நியூயார்க்
இ. பாரிஸ்
ஈ. டோக்கியோ
3. இந்தியாவில், உள்நாட்டு ராணுவ உற்பத்தி, 2014ஆம் ஆண்டில், ரூ.46,000 கோடியாக இருந்த நிலையில், தற்போது எவ்வளவு கோடியை எட்டியுள்ளது?
அ. ரூ.50 லட்சம் கோடி
ஆ. ரூ.85,000 கோடி
இ. ரூ.90,000 கோடி
ஈ. ரூ.1.51 லட்சம் கோடி
4. தமிழின் தொன்மையான நூலான திருக்குறள் ஏற்கெனவே, 34 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளதாக, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்துள்ளது?
அ. 20
ஆ. 30
இ. 10
ஈ. 15
5. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் விளம்பரங்களை, 'ஏ.ஐ. உருவாக்கம்' எனக் கட்டாயம் குறிப்பிட, எந்த நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது?
அ. ஸ்பெயின்
ஆ. இந்தியா
இ. தென்கொரியா
ஈ. நெதர்லாந்து
6. கத்தாரில் நடந்த உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், பெண்களுக்கான 25 மீ பிஸ்டர் பிரிவில், தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை?
அ. மனு பாக்கர்
ஆ. ரஹி சர்னோபாத்
இ. சிம்ரன் பிரீத் கெளர்
ஈ. ஈஷா சிங்
விடைகள்: 1. ஆ, 2. அ, 3. ஈ, 4. ஆ, 5. இ, 6. இ.

