sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்!

/

நான்கில் ஒன்று சொல்!

நான்கில் ஒன்று சொல்!

நான்கில் ஒன்று சொல்!


PUBLISHED ON : ஜன 05, 2026

Google News

PUBLISHED ON : ஜன 05, 2026


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

1. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே உருவான, மேம்படுத்தப்பட்ட பதிப்பான எந்த ஹெலிகாப்டரை, மத்திய விமான போக்குவரத்துத் துறை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது?

அ. துருவ் பிஎஸ்

ஆ. துருவ் என்ஜி

இ. துருவ் விஷ்

ஈ. துருவ் யாஷ்

2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்திலும், செய்தித்தாள் வாசிப்புக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. மேற்குவங்கம்

இ. உத்தரப்பிரதேசம்

ஈ. குஜராத்

3. இந்திய தர நிர்ணய அமைப்பு (பி.ஐ.எஸ்.) எந்தப் பொருளுக்கான, 'ஐ.எஸ். 19412:2025' என்ற தரக் குறியீட்டை, சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது?

அ. சாம்பிராணி

ஆ. கற்பூரம்

இ. அகர்பத்தி

ஈ. சந்தனம்

4. சீனா - ஜப்பான் இடையே, 1973இல் நடந்த போரில், சீன போர்க்களத்தில் பணியாற்றி பல உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர் துவாரகநாத் கோட்னியைக் கெளரவிக்கும் விதமாக, சீன அரசு அவர் பெயரில் நினைவு மண்டபம் திறந்துள்ளது. இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ. இந்தியா

ஆ. பங்களாதேஷ்

இ. இலங்கை

ஈ. ஜப்பான்

5. நாட்டின் இளம் நகராட்சி தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள, கேரள மாநிலம், கோட்டயம் மாவட்ட பாலா நகராட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள, 21 வயதான இளம் பெண் யார்?

அ. மீரா குமார்

ஆ. சந்தியா சென்

இ. சுப்ரிதா வர்மா

ஈ. தியா பினு

6. டில்லியில் நடந்த தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 'டிராப்' பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மத்தியப்பிரதேச வீராங்கனை?

அ. மனு பாக்கர்

ஆ. ரஹி சர்னோபாத்

இ. நீரு தண்டா

ஈ. பாயல் கட்ரி

விடைகள்: 1. ஆ, 2. இ, 3. இ, 4. அ, 5. ஈ, 6. இ.






      Dinamalar
      Follow us