
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. இந்தியாவின் எந்த மாநிலத்தில், கடந்தாண்டு ரத்து செய்யப்பட்ட 'பைக் டாக்சி' சேவையை, தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின்படி மீண்டும் தொடங்க அனுமதி அளித்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது?
அ. கேரளம்
ஆ. தமிழ்நாடு
இ. கர்நாடகம்
ஈ. தெலங்கானா
2. சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக, யு.பி.ஐ. உடன் இணைந்த, ரூ.30,000 வரை சுழல் நிதிக்கடன் பெறும் வகையிலான எந்தச் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டார்?
அ. பான் கார்டு
ஆ. ப்ரீபெய்ட் கார்டு
இ. டெபிட் கார்டு
ஈ. கிரெடிட் கார்டு
3. அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் கீழ், நடப்பு ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள தமிழக விஞ்ஞானி?
அ. காமகோடி
ஆ. சுதர்சனம்
இ. நாச்சியப்பன்
ஈ. செந்தில்குமார்
4. தமிழகத்தின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகள், சிறுதானிய உணவுப் பொருட்களை நேரடியாகச் சந்தை வரை கொண்டு சேர்த்து வருவது உற்சாகம் அளிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்?
அ. அரியலூர்
ஆ. கள்ளக்குறிச்சி
இ. சிவகங்கை
ஈ. நீலகிரி
5. இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட எந்த நாள், தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது?
அ. பிப்ரவரி 2
ஆ. ஜனவரி 30
இ. ஜனவரி 25
ஈ. ஜனவரி 15
6. இந்தோனேசியாவில் நடந்த, 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில், இந்தோனேசிய பாட்மின்டனில் அதிவேகமாக (380.1 கி.மீ.) பந்தை, 'ஸ்மாஷ்' செய்த வீராங்கனை வரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை?
அ. சிந்து
ஆ. சாய்னா நேவால்
இ. அஸ்வினி
ஈ. அபர்ணா போபட்
விடைகள்: 1. இ, 2. ஈ, 3. அ 4. ஆ 5. இ 6. அ

