
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எந்த இரு நாடுகள், 'ஆப்பரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில், ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன?
அ. ரஷ்யா - அமெரிக்கா
ஆ. ஈராக் - இஸ்ரேல்
இ. ரஷ்யா - ஈராக்
ஈ. அமெரிக்கா - இஸ்ரேல்
2. உலக அளவில் தங்கம் வாங்குவதில், எந்த நாடு இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக, உலக தங்க கெளன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் டைட் தெரிவித்துள்ளார்?
அ. ஜார்ஜியா
ஆ. இந்தியா
இ. நார்வே
ஈ. ஸ்வீடன்
3. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுடன், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களையும் பெற்று, இந்தியாவின் எந்த மாநில முதல்வர் சாதனை படைத்துள்ளார்?
அ. ரேவந்த் ரெட்டி, தெலங்கானா
ஆ. நிதிஷ்குமார், பீகார்
இ. யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசம்
ஈ. ஸ்டாலின், தமிழ்நாடு
4. வரும் தமிழகச் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, மொத்தம் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன?
அ. 38
ஆ. 22
இ. 25
ஈ. 28
5. கர்நாடகாவில் நடந்த, இந்தியாவின் முதல் தர ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 91வது சீசன் இறுதிப் போட்டியில், எந்த அணி முதன்முறையாகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது?
அ. தமிழ்நாடு
ஆ. காஷ்மீர்
இ. கேரளம்
ஈ. குஜராத்
6. எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணி முடிவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து எத்தனைப் பேர் நீக்கப்பட்டுள்ளனர்?
அ. 74 லட்சம்
ஆ. 80 லட்சம்
இ. 96 லட்சம்
ஈ. 56 லட்சம்
விடைகள்: 1. ஈ, 2. ஆ, 3. இ, 4. ஈ, 5. ஆ, 6. அ,

