sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

தந்திரக்கார வியாபாரி

/

தந்திரக்கார வியாபாரி

தந்திரக்கார வியாபாரி

தந்திரக்கார வியாபாரி


ADDED : அக் 20, 2023 05:30 PM

Google News

ADDED : அக் 20, 2023 05:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். '

5 பழம் 10 ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். யாரும் பழம் வாங்க வரவில்லை. முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ' 6 பழங்கள் 10 ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்திலும் இதே போல் நடக்க அந்த இளைஞனுக்கு எல்லா பழங்களும் விற்பனையானது.

இதை பார்த்துக் கொண்டிருந்த விற்பனை ஆலோசகர் ஒருவர், அவரிடம் இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் 6 பழம் 10 ரூபாய் என்று விற்றால் தானே உமக்கு விற்பனை ஆகும் என தனது ஆலோசனையை சொன்னார்.

முதியவர் சிரித்தபடி, அவன் என் மகன். அவனது யோசனை படி தான் பழ வியாபாரம் நடக்குது. மக்கள் மனதினை புரிந்து கொண்ட தந்திரக்கார வியாபாரி சார் அவன் என்றார் முதியவர்.

வாய்ப்புகள் இல்லையென்றால் கவலைபடாதே. உருவாக்கி கொள் என்கிறது தேவ மொழி.






      Dinamalar
      Follow us