ADDED : அக் 20, 2023 05:30 PM
படிப்பாளியான ஜானிடம் வந்து உங்கள் மகன் இவ்வளவு முட்டாளாக இருக்கிறானே என வருத்தப்பட்டு நடந்ததை சொன்னார் ஜோசப். வீட்டிற்கு சென்றவர் மகனிடம் தங்கத்தை விட வெள்ளி நாணயத்திற்கு தான் மதிப்பு அதிகம் என சொன்னாயாமே ஏன் என கேட்டார்.'பள்ளிக்கு செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு படிப்பாளி மகனே என அழைத்து 'இதில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் வெள்ளியை
எடுத்துக் கொள்வேன்.உடனே அங்கிருந்த அனைவரும் சிரித்துக் கிண்டல் செய்வர்.
நான் நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஒரு மாதமாக நடக்கிறது.
நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டும் எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்றிருக்கும் என்றான்.
தன் மகனின் புத்திசாலி தனத்தை பார்த்து வியந்தார். பல நேரங்களில் நாம் தோற்பதாக பலர் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் முன்னேறி கொண்டு இருக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. உன் இலக்கை நீயே தீர்மானி என்கிறது பைபிள்.