
சீடர் ஒருவரின் வீட்டில் சாப்பிட அமர்ந்தார் இயேசு. அவரை தரிசிக்க வந்தாள் ஒரு பெண். கேவலமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்ததாகச் சொல்லி அழுதாள். அதைக் கேட்டு விட்டு, 'தனக்கு வைத்த உணவை அவளுக்கு கொடுத்து சாப்பிடு' என்றார். கண்ணீர் சிந்திய அவள் காலில் விழுந்து கூந்தலால் காலை சுத்தம் செய்தாள். வாசனை திரவியத்தை காலில் பூசியும் விட்டாள்.
'ஒழுக்கம் இல்லாத இவளின் அன்பை ஆண்டவர் ஏற்கிறாரே'' என மனதிற்குள் வருந்தினார் சீடர். அவரை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். ''ஒருவருக்கு 500 வெள்ளி நாணயமும், மற்றொருவருக்கு 50 வெள்ளி நாணயமும் கடனாக கொடுத்தார் ஒரு நபர். சிலகாலம் கழித்து இருவரிடமும் பணத்தை தர வேண்டாம்'' எனத் தெரிவித்தார். இருவரில்
யார் அதிக நன்றியுடைவராக இருப்பார் எனக் கேட்டார். பணம் அதிகம் வாங்கியவரே என்றார் சீடர். அதைப் போல இவளும் அதிக பாவங்களைச் செய்து விட்டாள். இப்போது மனம் திருந்தி விட்டாள். எனவே இவளுக்கே முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.