நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண் ஒருத்தி அனாதை விடுதி கட்ட இடம் ஒதுக்குமாறு அரசிடம் கேட்டாள். அதிகாரியோ அலட்சியமாக பாறை நிறைந்த நிலத்தை ஒதுக்கினார். எல்லாம் நன்மைக்கே என கருதிய அவள், பாறைகளை உடைத்து கட்டடம் கட்ட ஏற்படும் செலவை எண்ணிப் பார்த்தாள். யோசிக்கும் போதே மலைப்பாக இருந்தது. இருந்தாலும் அப்பெண் நம்பிக்கையுடன் இருந்தாள். சில நாட்கள் கழிந்த பின் கான்ட்ராக்டர் ஒருவர், “சகோதரி! நான் கடலில் ஒரு பாலம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளேன். அதற்கு நிறைய கற்கள் தேவை. தங்கள் நிலத்திலுள்ள பாறைகளை உடைத்துக் கொள்ள அனுமதி கொடுங்கள்! நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறேன்'' என்றார். அவளும் சம்மதித்தாள். பாறைகள் உடைக்கப்பட்டன. பெருந்தொகை கிடைத்தது. விடுதி கட்டும் பணி எளிதாக முடிந்தது. நம்பிக்கை வாழ வைக்கும்.