
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசிரியர் ஜேம்ஸ் டைரி எழுதிக் கொண்டிருந்தார். அப்போது குடிப்பதற்கு ஒரு டம்ளரில் பாலைக் கொண்டு வந்து மேஜை மீது வைத்துச் சென்றாள் மனைவி லீனா.
அதைக் கவனிக்காதது போல எழுதியபடி இருந்தார். அந்த நேரத்தில் அவரின் மகள் லில்லி புத்தகத்தை எடுப்பதற்காக வந்தாள். டம்ளர் மீது அவளின் கைபட்டு பால் கொட்டியது. உடனே “அப்பா... மன்னியுங்கள்” என்றாள்.
'' தவறு உன் மீது இல்லை. உன் அம்மா பாலைக் கொண்டு வந்ததுமே, நான் குடித்திருக்க வேண்டும். தவறு என் மீதுதான்” என்றார். அதைக் கேட்டதும் லீனா ஓடி வந்தாள். ''இருவர் மீதும் தவறில்லை. நீங்கள் எழுதி விட்டு எழுந்த பின் பாலைக் கொடுக்காமல் போனது என் தவறு'' என்றாள்.
அன்புச் சங்கிலியால் நாம் கட்டப்பட்டு விட்டால் யார் மீதும் தவறு சொல்லத் தோன்றாது.