நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயதான தம்பதி சாலை ஓரத்தில் பொம்மை விற்றனர். அதைக் கண்ட ஜேம்ஸ் பைக்கை நிறுத்தி விட்டு சில பொம்மையைக் கையில் எடுத்தான். அதில் நாய் பொம்மை அவனுக்கு பிடித்திருந்தது. ''ஐயா... இதன் விலை என்ன'' எனக் கேட்க 'நுாறு' என்றார் முதியவர். 'உங்களால் ஐம்பதுக்கு தர முடியுமா...' எனக் கேட்க, பெரியவரும் மறுக்கவில்லை. அப்போது முதியவர், ''எனக்கு இரு மகன்கள். ஆனால் அவர்களுக்கு நன்றியில்லை. எங்களுக்கு உணவு தரவில்லை. பொம்மை விற்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்கிறோம். நான் இறந்தால் தானும் உடனே இறக்க வேண்டும் என்கிறாள் என் மனைவி'' என்றார் முதியவர்.
நாய் பொம்மையைக் கையில் வாங்கிய ஜேம்ஸ் ஐநுாறு ரூபாயை பெரியவரின் கையில் திணித்து விட்டு, 'நாய் நன்றி மறப்பதில்லை' என்றான். உணர்வுக்கு மதிப்பளித்தால் அனைவரும் நம் உறவினராகி விடுவர்.