நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தத்துவ ஞானி சாக்ரடீஸ் மீது பொறாமை கொண்ட சிலருக்கு நாம் புகழ் பெற முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. அவர்கள் அவரை அவமானப்படுத்த எண்ணி விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். அழுகிய பழங்கள், கெட்டுப்போன உணவை பரிமாறினர்.
கூட வந்த நண்பர்கள் விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களை கண்டிக்க முயன்றனர். அப்போது சைகையால் தடுத்து விட்டு சாக்ரடீஸ் சாப்பிட்டார். வெளியே வந்ததும் நண்பர்கள், 'ஏன் எங்களை தடுத்தீர்கள்' எனக் கேட்டனர். ''நான் கோபப்பட்டிருந்தால் அது அவர்களுக்கே வெற்றியாகி விடும். வெற்றி மனப்பான்மை கொண்ட நான் அதை விரும்பவில்லை”என்றார்.
நம்மை மற்றவர்கள் அவமானம் செய்தாலும் கோபப்பட வேண்டியதில்லை. அதை பொறுத்துக் கொள்வதே வெற்றி மனப்பான்மை.