
ஐக்கிய நாடுகள் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் எடுத்த முடிவு சரியல்ல என அமெரிக்க அதிபர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இறுதியில் ஒரு கதை மூலம் உண்மையை அவருக்கு விளக்கினார்.
தனது வண்டியை இழுக்க மூன்று பிராணிகளை தேர்ந்தெடுத்தார் ஒரு விவசாயி. வண்டி வேகமாகச் செல்ல வேண்டும் என்பது அவரது நோக்கம். வண்டியின் இடது புறத்தில் பெரிய மீன், வலது புறத்தில் அன்னப் பறவை, நடுவில் நண்டு என மூன்றையும் பூட்டினார்.
மூன்று பிராணியையும் முன்னோக்கி செலுத்தினார். தண்ணீரை நோக்கி இழுத்தது மீன். ஆகாயத்தை நோக்கி பறக்க முயன்றது அன்னம். பின்பக்கமாக இழுத்தது நண்டு. அதனால் வண்டி நகரவில்லை.
முரண்பட்ட முடிவு எடுக்க கூடாது என்பதை உணர்ந்தார் விவசாயி. இந்த கற்பனைக் கதையைக் கேட்ட ரஷ்ய அதிபர், 'இது எந்த நாட்டுக் கதை' எனக் கேட்டதற்கு 'ரஷ்ய நாட்டு கதை' என்றார். தவறை உணர்ந்த ரஷ்ய அதிபர் முடிவை மாற்றிக் கொண்டார்.