நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழிதவறிய ஆட்டுக்குட்டி ஒன்று தாயைத் தேடி அலைந்தது. தாகம் உண்டாகவே ஓடையில் தண்ணீர் குடிக்க சென்றது. சற்று தொலைவில் நின்ற ஓநாய் உறுமவே பயந்தது.
'என்ன முறைத்து பார்க்கிறாய்' என வம்பிழுத்தது ஓநாய்.
ஆடுகளான நாங்கள் எந்த தீங்கும் செய்ததில்லை என பணிவுடன் சொன்னது ஆட்டுக்குட்டி. 'என்னிடமே எதிர்த்து பேசுகிறாயா... உன்னை என்ன செய்கிறேன் பார்' என பாய வந்தது ஓநாய். பயத்தில் ஆட்டுக்குட்டி விலக அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து காலை ஒடித்துக் கொண்டது ஓநாய். எளியவரை துன்பப்படுத்தினால் தண்டனை உறுதி.