
தாவீது ராஜாவிடம் ஒரு பொற்கொல்லர், ''ராஜாவே! ஏதாவது நகை செய்ய வேண்டுமா?'' எனக் கேட்டார்.அவரைக் கண்டு எரிச்சலுடன், ''ஆமாம்... எனக்கு ஒரு மோதிரம் செய். ஆனால் ஒரு நிபந்தனை... நான் துக்கத்தில் இருக்கும் போது அதைப் பார்த்தால் மகிழ்ச்சி வர வேண்டும். மகிழ்ச்சியோடு இருக்கும் போது பார்த்தால் துக்கப்பட வேண்டும். அந்த மாதிரி மோதிரம் விசஷேமானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் தலையைத் துண்டிப்பேன்'' என நெருக்கடியை ஏற்படுத்தினார்.
இப்படி ஒரு மோதிரம் எப்படி செய்வது என புலம்பினார் பொற்கொல்லர். இதைக் கண்ட சிறுவன் சாலமோன், ''இதற்காகவா அழுகிறீர்கள்! வழக்கமான ஒரு மோதிரத்தை செய்யுங்கள். அதில் 'இதுவும் கடந்து போகும்' என்ற வாசகத்தை பொறித்தால் பிரச்னை தீர்ந்து விடும்'' என்றான். பொற்கொல்லரும் அப்படியே செய்தார். ''ஆஹா... அருமை!'' என பொற்கொல்லரை தழுவினார் தாவீது. மனதில் இருந்த துக்கம் நீங்கி சந்தோஷம் அடைந்தார். ''இனி நீ அழுது கொண்டிருக்காதே. உன் கூப்பிடுதலுக்கு அவர் இரங்குவார். உனக்கு மறுஉத்தரவு அளிப்பார்'' என்கிறது பைபிள்.