
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாணவர்களுடன் தெருவில் நடந்தார் ஆசிரியர் ஒருவர். அவர்களை கண்ட செல்வந்தர் ஒருவர், தன்னைத் தான் பார்க்க வருவதாக எண்ணிக் கொண்டு, 'சொல்லி அனுப்பினால் நான் உங்களைத் தேடி வந்திருப்பேனே' என்றார். 'வேறு வேலையாக செல்கிறோம். தங்களைக் காண வரவில்லை' என்றான் துணிவு மிக்க ஒரு மாணவன். பணக்காரரின் முகம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. 'அவரைத் தான் பார்க்க வந்தோம் எனச் சும்மா சொல்லி இருக்கலாமே' என்றார் ஆசிரியர். ''பொய் சொல்வதால் நம் வேலை தான் கெடும்'' என்றான் மாணவன்.
துணிச்சல் மிக்கவன் பொய் சொல்வதில்லை.