நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஞ்ஞானி லுாயி பாஸ்டர் வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர். இவருக்கு மறதி அதிகம். அவரது திருமணத்தன்று ஆய்வுக்கூடத்தில் இருந்தார். திருமணத்திற்கான நேரம் நெருங்கியது. சர்ச்சில் அவரை காணாததால் அவரைத் தேடி ஆராய்ச்சிக் கூடத்திற்கு வந்தனர். அதில் ஒரு நண்பர் வேகமாக, 'உங்களுக்கு இப்போது திருமணம். சீக்கிரம் சர்ச்சுக்கு வாருங்கள்' என்றார்.
ஆனால் அவர் அமைதியாக, 'ஏன் அவசரப்படுகிறீர்கள். முதலில் திருமணம் முடியட்டும் பிறகு வந்து கலந்து கொள்கிறேன்' என்றார்.
தொழிலில் ஆர்வம் வேண்டியது தான். அது வாழ்க்கை நிகழ்வுகளை மறக்கும் அளவு இருக்கக்கூடாது என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.