நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெருசலத்திற்கு பயணம் மேற்கொண்டார் ஒருவர். வழியில் கொள்ளையர்கள் அவரது உடைமைகளை திருடிச் சென்றனர். அதைக் கண்ட பாதிரியார் ஒருவர் பொருட்படுத்தாமல் சென்றார். பின்னர் அவ்வழியாக வந்த அறிஞர் ஒருவரும் அவருக்கு உதவி மனமின்றி சென்றார்.
மூன்றாவதாக அங்கு வந்த சிறுவன், காயம் அடைந்த நபருக்கு உதவி செய்து காப்பாற்றினான். இந்த மூவரில் யார் உயர்ந்தவர் என கூடியிருந்த மக்களை பார்த்து கேட்டார் ஆண்டவர். இதற்கு மக்கள், ''நீதி, நியாயம், அன்பு, பற்றி பாதிரியாரும், அறிஞரும் பேசத் தான் லாயக்கு. படிக்காத இந்த சிறுவனே மூவரில் சிறந்தவன்'' எனக் கூறினர்.