நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜானை பார்க்க நீண்டநாள் கழித்து கூடை நிறைய மாம்பழங்களுடன் வந்தார் நண்பர் பீட்டர். அருகில் நின்ற வேலைக்காரனிடம் ஒரு பழத்தைக் கொடுத்தார் ஜான். அவனோ பழம் சுவையாக இருப்பதாகச் சொன்னான்.
பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்ட போது அவை புளிப்பாக இருப்பதை ஜான் உணர்ந்தார். ''காலையில் நீ சாப்பிட்ட போது இனிப்பதாக சொன்னாயே'' என வேலைக்காரனிடம் கேட்டார். ' நீண்டநாள் கழித்து அவர் வந்துள்ளார். பழம் புளிக்கிறது எனச் சொன்னால் மனம் வருந்துவாரே' என்றான். நல்ல நட்பும், விசுவாசமும் என்றும் மாறாது என்கிறது பைபிள்.