
அறிவியல் கண்டுபிடிப்புகளின் மன்னர் தாமஸ் ஆல்வா எடிசன். அவர் அதில் எத்தனை முறை தோல்விகளைச் சந்தித்தார் என்பதை அறிந்தால் உங்களின் வாழ்வில் ஏற்படும் தோல்வி கண்டு துவள மாட்டீர்கள்.
ஸ்டோரேஜ் பாட்டரியை வடிவமைப்பதில் வெற்றி கண்டார் எடிசன். அவருடைய உதவியாளர் ஆச்சரியப்பட்டார். அதைக் கண்ட எடிசன், ''ஏன் வியக்கிறாய்? இது என்ன முதலாவது முயற்சியா... 5,000 முறை பாட்டரியை எப்படி செய்யக்கூடாது என்பதை அறிந்த பின்னரே இந்த வெற்றி கிடைத்துள்ளது'' என விளக்கம் அளித்தார்.
தோல்வியே வெற்றியின் முதல் படி. உயர்ந்த மனிதன் அன்பு, அமைதி, இரக்கம், நட்பு, மன்னிக்கும் குணம், அனைவருக்கும் உதவுதல், எல்லோரிடமும் சகோதர உணர்வுடன் பழகுதல் என நற்பண்புகளை கடைப்பிடிப்பவரே மனிதர்களில் சிறந்தவர். எண்ணம், சொல், செயலால் ஆண்டவரின் அருகில் இருக்கும் இவரே உயர்ந்த மனிதன் என்கிறது தேவமொழி.