நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தையும், ஆமையும் ஆற்றங்கரையோரத்தில் நடந்து சென்றன. எதிரில் முயல் ஒன்று துள்ளிக் குதித்தபடி வந்தது. அதனிடம், ''நீ மட்டும் இப்படி வேகமாக ஓடுகிறாயே... எப்படி'' எனக் கேட்டது நத்தை. ''நீங்கள் இருவரும் முதுகில் ஓட்டைச் சுமந்தபடி வருகிறீர்கள். அதை கழற்றி எறியுங்கள். என்னை போல ஓடலாம்'' என பதில் அளித்தது. அதைக் கேட்டதும் தங்களை இயற்கை தண்டித்து விட்டதாக வருந்தினர். அப்போது புதரின் மறைவில் இருந்த நரி ஒன்று, முயலின் மீது பாய்ந்தது. நரியைக் கண்ட பயத்தில் நத்தையும், ஆமையும் தங்களின் ஓட்டுக்குள் கை கால்களை இழுத்துக் கொண்டன. சற்று நேரத்தில் அவை வெளியில் வந்த போது முயலின் ரத்தமும், மாமிசமும் அங்கு சிதறிக் கிடந்தது.
காரணம் இல்லாமல் இயற்கை எதையும் படைப்பதில்லை.