
காதலிக்கு கடிதம் எழுதினால் 'அன்பே! ஆருயிரே!' என எழுதுவார்கள். ஆனால் போர்வீரன் நெப்போலியன் எழுதிய கடிதம் வித்தியாசமானதாக இருக்கும். இதோ அக்கடிதம்...
'நேற்று போர்க்களத்தில் வேலை. ஓய்வு என்பதே இல்லை. உணவோ உறக்கமோ இல்லாமல் இருந்தாலும் நான் சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு எங்கள் குழுவினர் ஆச்சரியப்படுகின்றனர். என்னால் மட்டும் எப்படி முடிகிறது என திகைக்கின்றனர். என்ன... உனக்கு ஏதாவது புரிகிறதா... நீ எழுதும் கடிதங்கள் எப்போதும் என் சட்டைப் பையில் தான் இருக்கும். சோர்வாகும் போது அதை படிப்பேன். அவ்வளவு தான் சோர்வு பறந்து விடும். புத்துணர்ச்சி உடல் எல்லாம் பரவும். ஒரு விஷயம் என் துன்பங்களைக் கண்டு நீ மனதை அலட்டிக் கொள்ளக் கூடாது. துன்பத்தை நான் வெறுக்க மாட்டேன்.
அபார சாதனைகளைச் சாதிப்பதற்காகவே வந்த துன்பம் தான் எனக்கு உண்மையான நண்பன். இன்பம் என் எதிரி. அது என்னைச் சோம்பேறியாகவும், கோழையாகவும் மாற்றி விடும். அதை நான் வெறுக்கிறேன்.
இரவில் நீ அதிக நேரம் கண் விழிக்காதே. உடம்பை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்' என எழுதியிருந்தார்.