ADDED : ஏப் 03, 2025 12:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருவுற்ற மான் ஒன்று பிரசவ வேதனையில் துடித்தது. இந்த நேரத்தில் புலி ஒன்று அந்த மானை நெருங்கியது. அதனிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது வேடன் ஒருவன் வில்லேந்தியபடி வந்தான்.
மற்றொரு பக்கமோ... காட்டுத்தீ வந்து மிரட்டியது. எப்படியாவது பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற வெறியுடன் மான் நின்றிருந்தது. அதற்கு உதவ இயற்கையை ஏவினார் ஆண்டவர். கண் இமைக்கும் நேரத்தில் வானத்தில் மேகம் கூடியது. இடியோசை முழங்கியது. தடுமாறிய வேடனின் அம்பு குறி தவறி புலியின் மீது பாய்ந்தது. கனமழையால் காட்டுத்தீயும் அணைந்தது. நிம்மதியுடன் குட்டியை ஈன்றது மான். மனதில் நம்பிக்கை இருந்தால் இயற்கையும் அடிபணியும்.