ADDED : ஏப் 17, 2025 12:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேற்றில் சிக்கிய ஆமையை சிறுவர்கள் சிலர் பிடித்தனர். அதை எப்படி எல்லாம் சித்ரவதை செய்வது என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
கல்லை எறிந்து ஆமையை அணுஅணுவாக கொல்ல வேண்டும் என்றான் ஒருவன். தீயில் இட்டு வதைக்க வேண்டும் என்றான் இன்னொருவன். கண்ட துண்டமாக வெட்டி உயிரை போக்க வேண்டும் என்றான் மற்றொருவன். ஆற்றில் வீசி எறிந்து மூச்சு திணறி சாகடிக்க வேண்டும் என்றான் வேறொருவன். 'என்னை ஆற்றில் மட்டும் வீசி விடாதீர்கள்.
முச்சுத்திணறல் அதிகமாகி விடும்' எனக் கெஞ்சியது ஆமை. உடனே ஒருவன் ஆமையை நீருக்குள் எறிந்து விட்டு சிரித்தான் ஒரு சிறுவன். 'தப்பித்தோம் பிழைத்தோம்' என ஆமையும் நீருக்குள் ஓடி தப்பித்தது. மரணவாசல் வரை சென்ற மனிதர்கள் கூட ஆண்டவர் மீது உள்ள நம்பிக்கையால் இந்த ஆமையைப் போல பிழைப்பது உண்டு.