நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்ல விஷயங்களில் ஈடுபடாமல் அலைபேசியில் விடுமுறையைக் கழித்தான் சிறுவன் தாமஸ். அவனது தாத்தா, 'தாமஸ் உனக்கு ஒரு கதை சொல்றேன்' என ஆரம்பித்தவர், 'காட்டில் இருந்து தப்பிய குரங்கு ஒன்று ஊருக்குள் வந்தது. அங்கு ஓரிடத்தில் இருந்த மதுவை தண்ணீர் என நினைத்து குடித்தது. அதன் நிலை எப்படி இருக்கும்' எனக் கேட்டார். 'சுயநினைவை இழந்து தள்ளாடும்' என சிரித்தான். புத்தி பேதலித்த குரங்கு, அங்கு சென்ற தேள் ஒன்றை பூச்சி என கருதி கையில் எடுத்தது. அப்போது அதன் நிலை என்னாகும்' எனக் கேட்டார். தேள் கொட்டியதால் குரங்கு வேதனையால் துடிக்கும் என்றான்.
வீணாக பொழுதை கழிப்பவன் தேள் கொட்டிய குரங்கிற்கு சமமாவான் என்றார் தாத்தா. மனம் திருந்திய தாமஸ் மன்னிப்பு கேட்டதோடு தேர்வுக்காக படிக்க ஆரம்பித்தான்.