நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயி ஒருவர் வீட்டருகே உள்ள நிலத்தில் சோளம் பயிரிட்டார். விளைந்த கதிர்களை பறவைகள் தின்று சேதமாக்கின. அவர் வளர்த்த கிளி ஒன்று பறவைகளுடன் சேர்ந்து சோளத்தை தின்று வந்தது. அவற்றை விரட்ட கவட்டையால் கற்களை வீசி எறிந்தார். அதில் ஒரு கல் கிளியின் மீது படவே இறக்கை முறிந்தது. அதற்கு சிகிச்சை அளித்தார் விவசாயி. அப்போது அங்கு வந்த விவசாயியின் மகன், 'அப்பா... கிளிக்கு என்னாச்சு' எனக் கேட்டான்.
பதில் சொல்வதற்குள், 'கெட்ட சிநேகிதம்... கெட்ட சிநேகிதம்' எனக் கத்தியது கிளி. 'துன்மார்க்கரின் பாதையில் செல்லாதே! தீயோரின் வழியில் நடவாதே' என்கிறது பைபிள்.