
ஜெருசலத்தின் மீது படையெடுத்தான் மாவீரன் அலெக்சாண்டர். வழியில் ஒரு மரத்தடியில் தங்கி ஓய்வெடுத்தான். பசியாக இருந்ததால், அருகிலுள்ள ஊருக்குள் உணவும், நீரும் வாங்கி வரும்படி கட்டளையிட்டான்.
'' நான் யார் தெரியுமா... மாவீரன் அலெக்சாண்டரின் வீரன். மன்னர் சாப்பிட உணவு கொடு' என மிரட்டும் தொனியில் கேட்டான். பசிக்காக உணவு கேட்பவன் இப்படி நடக்க மாட்டானே' என நினைத்த ஊர் மக்கள் யாரும் தரவில்லை.
ஓரிருவர் என்றால் பரவாயில்லை... கிராமமே கை விரித்ததால் வீரன் வெறுங்கையுடன் திரும்பினான். கோபமாக கிராமத்திற்குள் நேரில் சென்றான் மாவீரன். இதையறிந்த கிராமத்தின் தலைவர், 'மாவீரர் அலெக்சாண்டர் வாழ்க!' என கோஷம் இட்டபடி வரவேற்றார்.
பிறகு என்ன... புகழ்ச்சிக்கு மயங்கி அவர் கொடுத்த உணவு, தண்ணீரைப் பெற்றுக் கொண்டு திரும்பினான். எதிரியிடம் இருந்து தப்பிக்க புகழ்ந்து பேசினால் தவறில்லை என்கிறது நீதிமொழி.