
மான்குட்டி ஒன்று பெற்றோருடன் தண்ணீர் குடிக்க குளத்திற்கு சென்றது. அதன்பின் குளக்கரையில் இருந்த முயல்களுடன் விளையாடியது. அங்கு நெருங்கி வந்தது
ஒரு குட்டிக் குரங்கு. ஆனால் அதை மான் சேர்த்துக் கொள்ளவில்லை. தன்னை பேரழகி என்றும், குரங்கு அழகற்றது என்றும் கருதியதே அதற்கு காரணம்.
மறுநாள் தன் நண்பனான முயலைப் பார்க்க மீண்டும் குளத்திற்கு புறப்பட்டது. செல்லும் வழியில் மான் குட்டியைக் கண்ட குரங்கு மரக்கிளையை வேகமாக உலுக்கியது. ஏதேனும் ஆபத்து வரவிருப்பதை குறிப்பால் உணர்த்துகிறதோ என மான் நாலாபுறமும் பார்த்தது.
சற்று துாரத்தில் செந்நாய் ஒன்று வந்து கொண்டிருந்தது. தப்பித்தோம்... பிழைத்தோம் என இருப்பிடத்திற்கு திரும்பியது. தாயிடம் நடந்ததை விவரித்தது. புறக்கணித்த போதிலும் தனக்கு உதவி செய்த குரங்கை எண்ணி மான் நெகிழ்ந்தது. யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது என மான்குட்டி உணர்ந்தது.