நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவை சேர்ந்த இருவர் கியூபாவில் தங்கி இருந்தனர். தவறு செய்யாத அவர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். முடிவில் கொல்லவும் அரசு முடிவு செய்தது. இதற்கிடையில் அந்த இருவரையும் சந்திக்க அமெரிக்கா, இங்கிலாந்தைச் சேர்ந்த துாதுவர்கள் வந்தனர். 'பயப்படாதீர்கள்... உங்களுக்கு நல்லதே நடக்கும்' என தைரியம் சொன்னார்கள். ஓரிரு நாளிலேயே துாதுவர்களின் வாக்கு உண்மையானது.
அமெரிக்காவை பகைத்தால் போர் வரும் எனக் கருதி இருவரையும் கியூபா விடுவித்தது. அமெரிக்காவிற்கு திரும்பிய அவர்களிடம், 'உயிருடன் திரும்புவோம் என்ற நம்பிக்கை இருந்ததா'' என நிருபர்கள் கேட்டனர். ''நம்பிக்கையுடன் காத்திருந்தோம்; ஆண்டவர் அருளால் உயிர் பிழைத்தோம்'' என பதிலளித்தனர்.