நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுமண தம்பதியான டேவிட்டும், ஜாயும் படகில் சென்ற போது புயல் வீசியது. பயணிகள் அனைவரும் நடுங்கினர். ஆனால் டேவிட் மட்டும் தைரியமாக இருந்தான். 'உங்களுக்கு பயம் இல்லையா?' எனக் கேட்டாள் மனைவி. தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து மனைவியை நோக்கி ஓங்கினான். ஆனால் அவள் பயப்படவில்லை. ' உனக்கு பயம் இல்லையா?' என டேவிட் கேட்டதற்கு, 'கத்தி மோசமானது என்றாலும் அதை தாங்கி இருக்கும் கை என் அன்புக்குரியது' என பதில் அளித்தாள்.
''ஆம்! புயல் ஆபத்தானது என்றாலும் அதை உருவாக்கிய ஆண்டவர் அன்புமயமானவர். அதனால் நாம் பயப்படத் தேவையில்லை'' என்றான் டேவிட். 'நம்பிக்கை உள்ளவனுக்கு பயமும், பதற்றமும் இல்லை'