நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜான்சன் ரயிலில் பயணம் செய்து அலுவலகத்திற்கு செல்வார். அமைதியான குணம் கொண்ட அவரை கேலி செய்தார் இளைஞர் ஒருவர். ஆனால் ஜான்சன் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் கேலி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒருநாள் தான் சொன்ன வார்த்தைகளை ஒரு பேப்பரில் எழுதி நீட்டினார் இளைஞர். அதை படித்த ஜான்சனுக்கு சிரிப்பு வந்தது.
மறுநாள் இளைஞர், 'என் மீது கோபம் வரவில்லையா... 'எனக் கேட்டார். 'எதற்கு கோபப்பட வேண்டும். மாறாக உன் மீது அன்பு தான் அதிகரிக்கிறது' என்றார் ஜான்சன்.
'நான் கொடுத்த பேப்பரை என்ன செய்தீர்கள்'' எனக் கேட்டார்.
''பால் கணக்கு எழுதலாம் என பத்திரப்படுத்திக் கொண்டேன்'' என்றார் ஜான்சன். வெட்கத்தால் தலை குனிந்தார் இளைஞர்.