நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் ரோலென்ஸ். ஊழியத்தில் ஈடுபட்ட இவர் மீது எதிரிகள் சிலர் பொறாமை கொண்டனர். இரவில் அவர் துாங்கிய சமயத்தில் குடிசைக்கு தீயிட்டனர். குடிக்கும் நீரில் விஷத்தை கலந்தனர். ஆனால் அவர் உயிர் தப்பினார். எந்த சூழலிலும் மனம் கலங்கவில்லை. கடமையில் இருந்து பின்வாங்கவில்லை.
காலப்போக்கில் மனம் திருந்திய எதிரிகள் மன்னிப்பு கேட்டனர்.
''நாங்கள் துன்புறுத்திய நேரத்தில் என்ன மனநிலை இருந்தது'' எனக் கேட்டனர்.
'என்னுள் இருந்து ரட்சிப்பதும், உங்களை அப்படி செய்ய வைத்ததும் ஆண்டவரே. அதனால் யார் மீதும் எனக்கு கோபம் இல்லை' என பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார்.