நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வசதி மிக்க குடும்பத்தை சேர்ந்தவன் அந்த சிறுவன். பெற்றோர் இறந்ததால் உறவினரின் அரவணைப்பில் வளர்ந்தான். துடுக்கான அவன் காட்டிற்கு ஒருநாள் வேட்டையாடச் சென்றான். அங்கு கரடி ஒன்று துரத்தியது. துப்பாக்கியால் குறி பார்த்து கரடியை வீழத்தினான்.
அருகில் சென்ற போது, ''ஒரு பாவமும் அறியாத என்னை சுட்டு விட்டாயே... உன் வீரத்தை என்னிடம் தான் காட்டுவதா...'' என கேட்பது போல் இருந்தது. அவ்வளவு தான் அதன்பின் அவன் ஞானத்தை தேடி அலைந்தான். பைபிள் வசனம் அவனை ஞானி ஆக்கியது. அந்த சிறுவன் தான் பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்.