நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விறகு வெட்டி ஒருவன் வறுமையில் வாடினான். காட்டிலுள்ள தேவதை அவனுக்கு உதவ முன் வந்தது. அவனுக்கு கேட்கும்படி 'முன்னேறு மேலே... மேலே' என குரல் கொடுத்தது. அவனும் முன்னோக்கி நடந்தான்.
அங்கே விலை உயர்ந்த மரங்கள் சாய்ந்து கிடந்தன. அவற்றை வெட்டி விற்றால் அதிக ஆதாயம் கிடைக்கும் என மகிழ்ந்தான். மீண்டும் 'முன்னேறு மேலே... மேலே' என குரல் கேட்டது. அங்கே நிறைய பொற்காசுகள் கிடந்தன. அவற்றை சேகரித்துக் கொண்டான். எந்த பணியில் ஈடுபட்டாலும் வெற்றி பெறுவதற்கான மந்திரச் சொல் 'முன்னேறு மேலே... மேலே' என்பது தான்.