நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டேனியல், காபிரியேல் இருவரும் நண்பர்கள். நீண்ட நாளுக்கு பிறகு சந்தித்த அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்தனர். பின்னர் பேச்சுக்கு இடையே, 'பல தலைமுறையாக ஒரே தொழிலில் எப்படி நிலைக்க முடிகிறது' எனக் கேட்டார் காபிரியேல்.
அதற்கு டேனியல், 'வாடிக்கையாளரின் விருப்பம் அறிந்து செயல்பட வேண்டும். வியாபாரத்தால் உண்டாகும் ஆதாயத்தை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டாலும் நம் முயற்சியில் இருந்து பின்வாங்கவோ, வருத்தப்படவோ கூடாது என என் தந்தையார் சொன்னதை எல்லாம் பின்பற்றுகிறேன். இதுவே என் வியாபார ரகசியம்'' என்றார்.