நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமலி, எட்வின் இருவரும் சகோதரர்கள். தங்கையின் மீது பாசம் கொண்டவன் எட்வின். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தனர். அமலியை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தான்.
யார் கண்பட்டதோ தெரியவில்லை. மாப்பிள்ளைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அண்ணனிடம் விபரத்தை சொல்லி வருந்தினாள். தங்கை நன்றாக வாழ வேண்டும் எனக் கருதி தன் சேமிப்பு எல்லாம் ஒப்படைத்தான். நண்பர்களிடம் கடன் வாங்கியும் கொடுத்தான். ஓரே ஆண்டிற்குள்ளாக தங்கையின் குடும்பம் ராக்கெட் வேகத்தில் முன்னேறியது. அந்த நேரத்தில் பாட்டியும் இறக்க, பணமின்றி தவித்தான் எட்வின். கொடுத்த பணத்தை கேட்பானோ என பாட்டியின் இறப்பில் அமலி பங்கேற்கவில்லை. தனியாளாக பாட்டிக்கு இறுதிக்கடனைச் செய்தான். பணமே வாழ்க்கை அல்ல. அன்புக்காக ஏங்குவோரை புறக்கணிக்காதீர்.