ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் டூட்சிஸ், ஹூட்டுஸ் என்னும் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் டூட்சிஸ் இனத்தைச் சேர்ந்த இபிஜினியா என்ற பெண்ணின் கணவர், குழந்தைகளை ஹூட்டுஸ் இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கத்தியால் குத்திக் கொன்றான். அக்கொடியவன் மீது வழக்கு தொடர்ந்தாள் அந்த பெண். ஏழாண்டு சிறைத்தண்டனை அளித்தது நீதிமன்றம். தண்டனைக் காலம் முடியும் நேரத்தில் போது இபிஜூனியா தன்னை முழுமனதுடன் மன்னிக்க வேண்டும் என குற்றவாளி கேட்டுக் கொண்டான்.
இது குறித்து நிருபர்கள் பேட்டி கண்ட போது இபிஜூனியாவின் வீட்டில் அந்த இளைஞன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 'எதிரிக்கு உணவளிக்க எப்படி மனம் வந்தது' எனக் கேட்டார் நிருபர் ஒருவர். 'ஆண்டவர் அன்று செய்தது சாத்தியம் என்றால் இன்று நான் செய்வதும் சாத்தியமே' என்றாள் இப்ஜினியா. அவளின் பெருந்தன்மையைக் கண்ட இளைஞன் கண்ணீர் சிந்தினான்.