நண்பர் ஆப்ரகாமுடன் காரில் பயணித்தான் ஜான். முன் சீட்டில் இருந்த ஜான் சிறிது நேரத்தில் துாங்கி விழுந்தான். இதைக் கண்ட நண்பர், ''ஜான்... நீ பின்பக்க சீட்டிற்கு போ. துாக்கம் என்னையும் தொற்றி விடும். பிறகு போக வேண்டிய இடத்திற்கு போகாமல் வேறு எங்காவது சென்று விடுவோம்' என்றார் கிண்டலாக. 'ஆப்ரகாம் எவ்வளவு நாசூக்காக விஷயத்தை கையாள்கிறார்' என மனதிற்குள் நினைத்தபடி எழுந்தான் ஜான்.
ஆனால் இதற்கு நேர் மாறாக பணிபுரியும் இடத்திலும், உறவுகளிலும், பொது இடங்களிலும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களுடன் பணி செய்யும் போது விழிப்புடன் செயல்படுங்கள். உங்களிடம் இருக்கும் சுறுசுறுப்பு அவர்களால் கெட்டு விடும். அவர்களின் எண்ணம், சொல், செயல் நம்மை அறியாமல் வந்து ஒட்டிக் கொள்ளும். அதனால் தான் குழந்தைகளிடம் 'எப்போதும் நல்லதையே நினை, பேசு, செய்ய வேண்டும்' என வலியுறுத்தச் சொல்கின்றனர் உளவியலாளர்கள். அருகில் இருப்பதே உன் மனதில் பிரதிபலிக்கும்.