தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/மகிழ்ச்சிக்கான வழி

மகிழ்ச்சிக்கான வழி

மகிழ்ச்சிக்கான வழி


ADDED : ஆக 01, 2025 07:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2025 07:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெயிலில் நடந்து சென்ற பீட்டருக்கு மயக்கம் ஏற்பட்டது. ஒரு பெட்டிக் கடையில் ஒதுங்கினார். அப்போது அவரைக் கண்ட கடைக்காரர் குடிக்க தண்ணீரும், உட்கார சேரும் கொடுத்தார். சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் நடந்தார் பீட்டர். கைப்பையை சேரிலேயே மறந்து விட்டுச் சென்றார்.

அந்த பையை எடுத்த கடைக்காரர், பீட்டரின் வீடு தேடி வந்து கொடுத்தார். அன்பளிப்பாக பீட்டர் ஐநுாறு ரூபாய் கொடுத்த போது, 'ஐயா... தங்களின் பெருந்தன்மை எனக்கு புரிகிறது.

அன்பளிப்பை அலட்சியம் செய்வதாக நினைக்க வேண்டாம். தங்களுக்கு தெரிந்தவர்களிடம் என் கடையை அறிமுகப்படுத்துங்கள். ஒரு ரூபாய் கிடைத்தாலும் அது உன் உழைப்பின் மூலம் தான் கிடைக்க வேண்டும் எனச் சொல்வார் என் அப்பா. போதும் என்ற மனமே மகிழ்ச்சிக்கான வழி' என்றார் கடைக்காரர்.

நேர்மையாக இரு. பரிசுத்த ஆவி உம்மை ரத்தின சிம்மாசனத்தில் அமர வைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us