ADDED : ஆக 01, 2025 07:54 AM
அ நிறம் | அளவு
அச்சகம் ஒன்றில் பணிபுரிந்தான் சிறுவன் ஒருவன். அவனுக்கு நேரம் கிடைத்த போதெல்லாம் அறிவியல் அறிஞர் அம்சட்டேவின் புத்தகங்களை படிப்பான். அவரது சொற்பொழிவையும் அவ்வப்போது கேட்பான்.
அவர் மீதுள்ள ஈடுபாட்டால், ' ஐயா... உங்கள் ஆய்வகத்தில் எடுபிடி வேலைக்கு என்னைச் சேர்ப்பீரா...' எனக் கடிதம் எழுதினான். உன்னை போன்றவர்கள் தான் எனக்கு தேவை. 'வா ராஜா வா' என அவரும் சம்மதித்தார்.
இந்த சிறுவன் யார் தெரியுமா... இங்கிலாந்தில் வறுமை காரணமாக பள்ளிக்கூடம் செல்லாத அவன், விடாமுயற்சியால் விஞ்ஞானியாக மாறினான். அவன் தான் மின்சார மோட்டாரைக் கண்டுபிடித்த விஞ்ஞானி மைக்கேல் பாரடே.
