நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செருப்பு தைக்கும் தொழிலாளி ஈவான்ஸ் வீட்டிற்கு வந்த முதியவர், ''எனக்கு பசிக்கிறது. ஏதாவது தருவாயா'' எனக் கேட்டார். அவருக்கு ரொட்டித் துண்டுகளை கொடுத்தார் ஈவான்ஸ். சிறுவன் ஒருவனைத் துரத்தியபடி, ஒரு பாட்டி அவரது வீட்டு வாசலுக்கு வந்தாள்.
அவள் வைத்திருந்த ஆப்பிளை சிறுவன் திருடியதே விரட்டியதற்கு காரணம். அவன் ஆதரவற்றவன் என்பதை அறிந்து கொண்ட ஈவான்ஸ், ''பாட்டி... அவனைத் தண்டிக்காதே. அவனும் உங்க பேரன் தான்'' என சமாதானப்படுத்தினார். அந்தி பொழுதில் இளம்பெண் ஒருத்தி குழந்தையுடன் தெருவில் சென்றாள்.
பனிப்பொழிவால் அவள் நடுங்குவதை கண்டு போர்வை ஒன்றை கொடுத்தார். அன்றிரவு ஆண்டவரின் குரல் ஒலித்தது. ''ஈவான்ஸ்... உன்னை இன்று மூன்று முறை சந்தித்தேன். என்னை நன்றாக உபசரித்தாய்'' என்றது அந்த குரல். எளியவர் மீது அன்பு காட்டுங்கள்.