பழக்கடை வாசலில் நின்று அலைபேசியில் ஸ்பீக்கர் மூலம் சார்லஸ் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவது கடைக்காரருக்கு நன்றாக கேட்டது.
சார்லஸ்: 'சார்... உங்கள் தோட்டத்தில் எனக்கு வேலை தரக் கூடாதா?
தோட்டக்காரர்: 'என் தோட்டத்தில் ஏற்கனவே ஒருவர் வேலை செய்கிறாரே'
சார்லஸ்: 'சார் சம்பளம் பாதி கொடுத்தால் போதும். தோட்டத்தை பார்த்துக்குவேன்'
தோட்டக்காரர்: இல்லை. இப்போ இருப்பவரே நல்லா பார்த்துக்கிறார்.
சார்லஸ்: வீட்டு வேலையாவது தாங்க. சம்பளம் கூட வேண்டாம் என்றான்
தோட்டக்காரர்: தம்பி... உங்க நல்ல மனசுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும்' என அலைபேசியை துண்டித்தார்.
“ தம்பி... உன் பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சது. என்னிடம் வேலைக்கு வர்றாயா'' என பழக்கடைக்காரர் சார்லஸிடம் கேட்டார்.
அதற்கு அவனோ, என் முதலாளியிடம் தான் குரலை மாற்றி பேசினேன். அவர் என்னை பற்றி என்ன நினைக்கிறார் என தெரியவே இப்படி செய்தேன்'' என்றான். இதைக் கேட்டதும் குலை நடுங்கிப் போனார் கடைக்காரர்.