நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லதும், கெட்டதும் அவரவர் பார்வையில் தான் உள்ளது என்றார் ஒரு பெரியவர். அதைக் கேட்ட இரு இளைஞர்கள், '' எங்களுக்கு புரியும்படி சொல்லுங்கள்'' என்றனர்.
''பஸ், ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தால் 'கூட்ட நெரிசல்' என்கிறோம். அதே போல பிரார்த்தனைக்கு கூடினால் அதை நெரிசல் எனச் சொல்கிறோமா... இல்லையே. 'நற்செய்திக் கூட்டம்' என்கிறோம். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு ஒருவர் மாறினால் அவரை 'துரோகி' எனத் திட்டுகிறோம். அவரே கட்சிக்கு திரும்பி வந்தால் 'தாய்க் கழகத்திற்கு திரும்பினார்' என பாராட்டுகிறோம்.
எல்லாம் அவரவர் பார்வையில் தான் இருக்கிறது. ஒரு விஷயத்தை நல்லது என நினைத்தால் அது நல்லதாகவே தோன்றும். கெட்டதாக நினைத்தால் அதுவே கெட்டதாக தோன்றும்'' என்றார் பெரியவர்.