நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை பெயர்த்துக் கொண்டிருந்தார். பலகையில் ஏற்பட்ட சிராய்ப்பில் ஒரு மரப்பல்லியின் கால் சிக்கியிருந்தது.
அதில் ஆச்சரியம் என்னவென்றால் வீட்டை உருவாக்கி பல மாதமாகி விட்டது. கால் சிக்கிய பெண் பல்லி, இத்தனை மாதமாக எப்படி வாழ்கிறது என அறிய மராமத்து வேலையை கைவிட்டு கண்காணிக்க தொடங்கினார்.
சிறிது நேரத்தில் உணவைக் கவ்விய படி வேறொரு ஆண் பல்லி வந்தது. கொண்டு வந்த உணவை அதற்கு ஊட்டி விட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த ஜப்பானியர், பல்லியின் காலை சிராய்ப்பில் இருந்து விடுவித்தார்.
குடும்பத்துடன் ஒருவேளை உணவைக் கூட எல்லோரும் அமர்ந்து சாப்பிட முடியாமல் இயந்திரத்தனமாக வாழ்கிறோம். இவர்களை விட காதலியை தேடி வந்து உணவு ஊட்டிய பல்லி எவ்வளவோ மேல்.