ADDED : அக் 30, 2025 11:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடைக்காரர் ஒருவர் அந்த வழியாக வரும் சிறுவர்களிடம் மிட்டாய் தருவதாகச் சொல்லி வேலை வாங்குவார். ஆனால் மிட்டாயோ, கூலியோ தர மாட்டார்.
ஏமாந்த சிறுவனான ஜான் பாடம் புகட்ட விரும்பினான். ஒருநாள் கடைக்காரர் உட்கார்ந்தபடி துாங்கிக் கொண்டிருக்க, அவரது மகன் கடையை கவனித்துக் கொண்டிருந்தான். அவனிடம் ஜான், '' என் பெயர் எறும்பு; உன் அப்பாவுக்கு என்னை நன்றாக தெரியும். எனக்கு பத்து மிட்டாய் கொடு'' என வாங்கினான். தானும் எடுத்துக் கொண்டு மற்ற சிறுவர்களுக்கும் கொடுத்தான். அப்போது மகன், ''அப்பா... எறும்பு'' என கத்தினான். ''அது வந்த வழியே போய் விடும்'' எனச் சொல்லி விட்டு கடைக்காரர் துாக்கத்தை தொடர்ந்தார்.
ஏமாற்றாதே; நீ ஏமாறுவாய்.

