
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணக்காரர் ஜேம்ஸ் துன்பம் என வருவோருக்கு உதவி செய்து வந்தார். நாளடைவில் அவரிடம் சென்றால் உதவி கிடைக்கும் என நம்பிக்கையுடன் பலர் வந்தனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாத போது அவரது மனைவி ஜோன்ஸ் வருவோரை திட்டி அனுப்பினாள். இந்நிலையில் ஒருநாள், அவள் ஜெபம் செய்த போது மனதில் இருந்து ஆண்டவர் பேசுவதை உணர்ந்தாள்.
'மகளே! பட்டுப்போன மரத்தை நாடி பறவைகள் வருவதில்லை. காய்த்த மரத்தை நோக்கியே அவை செல்லும். உன் கணவரை பழம் தரும் நல்ல மரமாக வைத்திருக்கிறேன். இன்னும் உங்களை ஆசீர்வதிக்க காத்திருக்கிறேன்' என்றார்.
தவறுக்காக வருந்திய ஜோன்ஸ் கணவருடன் சேர்ந்து தர்மம் செய்ய முடிவு செய்தாள்.
பழம் தரும் மரங்கள் நீங்கள்; அனைவருக்கும் உதவுங்கள்.

