நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அல்போன்ஸின் மகளான ரோஜா வசீகரமான பெண். பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறாள். அவள் கல்லுாரிக்கு புறப்படும் முன் செலவுக்கு பணம் கொடுத்த தாய், 'பெண் குழந்தையான நீ எப்போதும் விழிப்பாக இருக்கணும். படிப்பில் அக்கறை காட்டணும். தேவைக்கு மட்டும் செலவு செய்யணும்'' என்றாள் தாய்.
வெளியூரில் இருந்து வந்திருந்த நான்சியின் அத்தை, ''வயசுப் பெண்ணுக்கு புத்திமதி சொல்றது அவசியம்'' என்றாள். 'அம்மா சொல்ற அறிவுரை முள்ளைப் போல இந்த ரோஜாவை காக்கும்' என்றாள் மகள்.

