ADDED : டிச 11, 2025 10:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாமஸ் ஆல்வா எடிசனை 'விஞ்ஞானி' எனக் குறிப்பிட்டார் ஒரு நண்பர். அதைக் கேட்ட எடிசன், 'என்னை வியாபாரி எனச் சொன்னால் மகிழ்வேன்' என்றார் தன் மாளிகையை சுற்றிக் காட்டினார். அங்கு பாதாள அறை ஒன்று இருந்தது. அதைக் கடப்பதற்கு பல தடுப்புகளை தாண்ட வேண்டி இருந்தது. 'இந்த சுழலும் அறையைக் கடக்க சிரமமாக இருக்கிறதே' எனக் கேட்டார். நாம் இந்த வழியை தாண்டும் போது வீட்டின் தண்ணீர்த் தொட்டியில் பதினாறு காலன் (64 லிட்டர்) தண்ணீர் நிரம்பி விடும். யந்திரம் சுழல்வது தெரியாமல் அறையை கடப்பதாக பிறர் நினைக்கலாம். இந்த உண்மை எனக்கு மட்டுமே தெரியும்'' என்றார் எடிசன். நண்பரோ அடுத்த முறை உங்களைப் பற்றி பேசும் போது 'பக்காவியாபாரி' என்றே குறிப்பிடுவேன் என்றார்.

