ADDED : ஜன 28, 2026 01:37 PM

அ நிறம் | அளவு
மரணப்படுக்கையில் இருந்தார் போதகர் சாமுவேல் பவுல். தன் உதவியாளரிடம், ''என் வீட்டின் கூரையை பார்த்தாயா... ஓடுகள் உடைந்து விட்டன. மழை பெய்தால் ஒழுகுகிறது. ஆனால் அதற்காக நான் வருந்தவில்லை.
ஏனெனில் பரலோக சாம்ராஜ்யத்தில் எனக்கான மாளிகை தயாராக உள்ளது. அதுவே என் நிரந்தர இருப்பிடம்” என உயிர் துறந்தார். இவர் சொல்வதே உண்மை. இதை உணராதவர்கள் உலகின் மீது கண்மூடித்தனமான ஆசை வைத்து துன்பப்படுகிறார்கள்.
“மோட்சம் செல்லும் பிரயாணிகள் நாம். நமக்கான குடியிருப்போ பரலோகத்தில் உள்ளது. கண்களை உலகத்தின் மீது பதிக்காமல் நித்திய ராஜ்யத்தை நோக்கி செலுத்துவோம்”
