நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாக்ஸிமியன் நாட்டின் மன்னன் போரில் பெர்சிய நாட்டை தோற்கடித்தான். வெற்றிக் களிப்பில் இருந்த அவன் வரும் வழியில் சமோசாற்றா நகரத்தில் தங்கினான். தன்னை பெருமைப்படுத்தும் விதமாக விழா நடத்தவும் ஆணையிட்டான். இயேசுவின் உபதேசங்களை பின்பற்றி வாழ்ந்த இப்பார்க்கஸ், பிலோத்தேயுஸ் என்னும் இருவரும், அவர்களின் ஐந்து சீடர்களும் விழாவில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தனர்.
இதை அறிந்த மன்னன் ஏழு பேரையும் சிறையில் அடைத்தான். அவர்களின் மனஉறுதியைக் கண்ட மன்னன், ''இயேசுவின் உபதேசங்களை ஏற்க மறுக்கிறேன் எனச் சொன்னால் விடுதலை செய்வேன்'' என்றான். அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். ஏழுபேரையும் சிலுவையில் அறைந்து கொன்றான். அவர்கள் சத்தியத்தின் சாட்சியாக இன்றும் இருக்கின்றனர்.

