ADDED : ஏப் 15, 2026 09:14 AM

அ நிறம் | அளவு
சூப்பர் மார்க்கெட்டுக்கு மகள் மியாவுடன் சென்றாள் லில்லி. பொருட்களை வாங்கிய பின் பணம் செலுத்தும் இடத்திற்கு வந்தாள்.
சிறுமியைக் கண்ட கடைக்காரர், ''ஜாடியில் உள்ள சாக்லேட்டை எடுத்துக் கொள்'' என்றார். ஆனால் அவளோ அதை எடுக்கவில்லை.
'சாக்லேட் பிடிக்காதா?' எனக் கேட்க, 'ரொம்ப பிடிக்கும்' என்றாள். உடனே அவர், சாக்லேட்டை அள்ளிக் கொடுத்தார். அம்மாவுடன் அவளும் புறப்பட்டாள்.
வெளியே வந்ததும், 'ஏன் சாக்லேட் எடுக்கலை?'
எனக் கேட்டாள் லில்லி. சிரித்தபடி, 'என் கையை விட அவரோட கை பெரிசு' என்றாள் மியா. இந்த சிறுமியைப் போல நமக்கான நன்மையை ஆண்டவர் அள்ளிக் கொடுக்கும் வரை காத்திருப்போம்.
